இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் புலி. இப்படத்தை சிம்புதேவன் இயக்க, ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் 70% படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது அடுத்த கட்ட ஷுட்டிங் பிப்ரவரி 21ம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும், படத்தை ஜுலை மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். பெரும்பாலும் இந்த மாதத்திலேயே படம் வரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Loading...