சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் மீண்டும் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்த என்னை அறிந்தால் படம் ஹிட்டாகியுள்ளது. அதிலும் அருண் விஜய்க்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனால் அவர் பெருமகிழ்ச்சியில் உள்ளார். என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.

சிறுத்தை சிவா தான் அஜீத்தை மீண்டும் இயக்கும் படத்தில் தன்னுடைய ஆஸ்தான நாயகியான தமன்னாவையே நடிக்க வைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் படத்தின் ஹீரோயின் தமன்னா இல்லையாம்.

அஜீத் ஜோடியாக சமந்தா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் படத்தில் சமந்தாவும் இல்லை என்று கூறப்படுகிறது.

சிவா இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் தான் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்ருதி தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் ஜோடியாக புலி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.