விஜய், விஷால் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். விஷால் ஒரு பேட்டியில் ‘நான் இயக்குனர் ஆனேன் என்றால், என் முதல் படத்தில் ஹீரோ விஜய் தான்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய்க்கு போட்டியாக ஏன் விஷால் களம் இறங்க வேண்டும் என்று நினைக்கிறீங்களா? விஷயம் அது இல்லை, விஜய் தற்போது புலி படத்தில் நடித்து வருகிறார்.

அதே போல் விஷால், சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க, அந்த படத்திற்கு பாயும் புலி என்று தலைப்பு வைத்துள்ளனர்.