ராஜா ராணி படம் இளைய தளபதி விஜய்யை மிகவும் கவர்ந்த காரணத்தால், தன் அடுத்த படத்தின் கால்ஷிட்டை அட்லீயிடம் கொடுத்தார். புலி படம் முடிந்த கையோடு இந்த படத்தில் இவர் நடிக்கவுள்ளார்.

ஆனால், இப்படத்தில் விஜய்க்கு யார் தான் ஜோடி? என்று இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது. முதலில் நயன்தாரா கமிட் ஆனர் என கூறப்பட்டது. பின், அவர் இல்லை சமந்தா, எமி ஜாக்ஸன் என்றார்கள்.

அதே போல் இப்படத்தில் வடிவேலு, பாரதிராஜா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், இவர்களும் நடிக்க வில்லை என்கிறது நெருங்கிய வட்டாரங்கள். எது எப்படியோ படம் நன்றாக வந்தால் போதும் தளபதி ரசிகர்களுக்கு.