பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டிய படத்தை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் போடுவார்கள். ஆனால், பிறந்தநாளை பிகினியில் கொண்டாடி அதனை உற்சாகத்தோடு தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படம் பற்றிதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. சமீபத்தில் வெளியான ‘அனேகன்’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தவர் அமிரா தஸ்தூர். ஏராளமான விளம்பரப்படங்களில் நடித்துள்ள இவருக்கு இது தமிழில் அறிமுக படமாகும்.

பாலிவுட்டில் மணீஷ் திவாரியின் இசாக் படத்தில் முதன் முதலில் தோன்றியவர் அமிரா. 13வது வயதில் மாடலிங் துறையில் நடிக்க வந்த அமிரா, க்ளீன் அண்ட் க்ளீயர், டவ், வோடபோன் மற்றும் மைக்ரோமேக்ஸ் போன்ற விளம்பரப் படங்களில் நடித்துள்ளார்.

amyra-flaunts-her-bikini-in-thailand1-600

அமிரா கடந்த மே 7ஆம் தேதி தனது 22வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அவர் தாய்லாந்தில் உள்ள கொ சமுயி தீவுக்கு தனது குடும்பத்துடன் சென்றார்.

அட்டகாசமாக பிகினி உடையில் கடலில் நீந்தி மகிழ்ந்தார் அமிரா. கடற்கரையில் டூ பீஸ் உடையில் இருப்பது மற்றும் தண்ணீரில் அதே உடையில் மிதப்பது போன்ற கண்கவர் படங்களை அமிராவே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பிகினி படங்கள் தற்போது பரபரப்பை கிளப்பி வருகிறது. சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக மட்டுமல்ல கவர்ச்சியாகவும், பிகினியிலும் நடிக்கத் தயார் என்பதை இதன்மூலம் சொல்லாமல் சொல்ல வருகிறார் அமிரா என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

Loading...