ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளிவந்தது!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விஜய் நடிக்கும் 63வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 டைட்டில், பர்ஸ்ட் லுக் வெளிவந்தது!
பிகில்

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விஜய் நடிக்கும் 63வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி உள்ள தளபதி 63 படம். இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் இன்று இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் படத்தின் தலைப்பு பிகில் என தெரியவந்துள்ளது. இந்தப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

நடிகர் விஜயின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்தப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பதே அவரது ரசிகர்ளுக்கு பெரும் டானிக்காக உள்ளது. 

கறிக்கடையில் காவி வேட்டியில் அப்பாவாக அமர்ந்திருக்கும் ஒரு விஜயும் கையில் பந்துடன் சிவப்பு நிற பனியனுடன் இளம்வயதாக ஒரு விஜயும் உள்ளனர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில். அப்பாவாக கறிக்கடையில் அமர்ந்திருக்கும் விஜய் பார்வையிலேயே மிரட்டுகிறார். 

விஜயின் கெட்டப்புக்கு ஏற்ப படத்தின் பெயரும் பிகில் என தூக்கலாக உள்ளது. `ஃபர்ஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களிலேயே 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதனை டிவிட்டரில் லைக் செய்துள்ளனர். 

27ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஷேர் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து நாளை நள்ளிரவு 12 மணிக்கு மற்றொரு போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

பிகில்