#Thalapathy63ல் அடிச்சிதூக்கப் போகும் யோகி பாபு: பாவம், விஜய்!
தளபதி 63 படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தளபதி 63 படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் வரும் 21ம் தேதி துவங்குகிறது. படப்பிடிப்பு துவங்கும் முன்பே தினமும் அப்டேட் கொடுத்து அசத்துகிறார்கள்.
அப்டேட்டுகளை பார்த்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். தளபதி 63 படத்தில் கதிர், ரோபோ ஷங்கரின் மகள் நடிக்க உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் யோகி பாபுவும் தளபதி 63 குழுவில் சேர்ந்துள்ளார். சர்கார் படத்தில் விஜய்யின் ஓட்டை கள்ளஓட்டாக போட்டு பிரச்சனைக்கு வழி வகுத்தார் யோகி பாபு. இந்நிலையில் தளபதி 63 படத்தில் என்ன பிரச்சனையை கிளப்பப் போகிறாரோ.
விஜய் படத்தில் நடிக்கப் போவதாக யோகி பாபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவருக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Adchithooku
— Yogi Babu (@yogibabu_offl) January 13, 2019
Going to act with #Vijay sir #Thalapathy63 pic.twitter.com/klVOXxjwZC