பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சர்ச்சைக்கு முதன் முதலாக நடிகர் விளக்கம்!

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் விஜய். இவர் நடிப்பில் இந்த வருடம் தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சர்ச்சைக்கு முதன் முதலாக நடிகர் விளக்கம்!
விஜய்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் விஜய். இவர் நடிப்பில் இந்த வருடம் தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வரவுள்ளது.

இதன் இசை வெளியீட்டு விழா செம்ம பிரமாண்டமாக சென்னையில் நடந்து முடிந்தது, இதில் நடிகர் விவேக் ஒரு சிவாஜி பாடலை குறிப்பிட்டு பேசினார்.

அதற்கு அந்த பாடலை விவேக் தவறாக சித்தரித்துவிட்டார் என சர்ச்சை எழுந்தது, தற்போது டுவிட்டரில் அதற்கு விவேக் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதில் ‘1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”.

அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க’ என கூறியுள்ளார்.