திருமணம் திரைவிமர்சனம்

சேரன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். அவரின் ஒவ்வொரு படைப்பும் ஏதாவது ஒரு பிரிவில் தேசிய விருதை பெற்றுவிடும், அந்த அளவிற்கு தரமான படங்களை கொடுத்த சேரன், நீண்ட இடைவேளைக்கு பிறகு திருமணம் என்ற படத்தின் மூலம் நம்மை சந்திக்க வந்துள்ளார், சேரன் மீண்டும் கம்பேக் கொடுத்தாரா? பார்ப்போம்.

திருமணம் திரைவிமர்சனம்
திருமணம் திரைவிமர்சனம்

சேரன் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். அவரின் ஒவ்வொரு படைப்பும் ஏதாவது ஒரு பிரிவில் தேசிய விருதை பெற்றுவிடும், அந்த அளவிற்கு தரமான படங்களை கொடுத்த சேரன், நீண்ட இடைவேளைக்கு பிறகு திருமணம் என்ற படத்தின் மூலம் நம்மை சந்திக்க வந்துள்ளார், சேரன் மீண்டும் கம்பேக் கொடுத்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

திருமணம் கதையாக பார்த்தால் மிகவும் எளிமையான கதை தான், சேரன் ஒரு நேர்மையான அரசு அதிகாரி. அவருடைய தங்கச்சி காவ்யா சுரேஷ், FM-ல் வேலைப்பார்க்கும் உமாபதியை காதலிக்கின்றார்.

அவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் பிரச்சனை இல்லை என்றாலும், மாப்பிள்ளை வீட்டார் மிகவும் ஆடம்பரமானவர்கள். பெண் வீட்டார் மிடில் க்ளாஸ் பேமிலி.

இந்த இரண்டு துருவங்கள் எப்படி இணைந்தனர், இந்த திருமணம் நன்றாக நடந்ததா, திருமண நிகழ்வுகளில் நடக்கும் கூத்துக்கள் என்பதை கண்முன் வெட்ட வெளிச்சமாக காட்டுவதே இந்த திருமணம்.

படத்தை பற்றிய அலசல்

சேரன் என்றாலே ஒரு தரமான படைப்புடன் தான் வருவார், அதேபோல் இந்த முறை திருமணம் அவசியம், ஆனால் திருமண செலவுகள் ஆடம்பரம் அத்தியாவசியம் என்ற கதையை கையில் எடுத்து வந்துள்ளார். உமாபதி சிறு வயதியிலிருந்தே தன் அக்கா சுகன்யா வளர்ப்பிலேயே இருப்பவர்.

சேரன் நடுத்தர குடும்பத்தில் தன் தங்கச்சியை நல்ல இடத்தில் கட்டி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர், இதற்காக சேரன் உமாபதியை ஒரு வாரம் ஆள் வைத்து செக் பண்ணுவது, வாட்ஸ் அப் வரை சென்று அவருடைய குணத்தை கண்டுப்பிடிப்பது, அதே நேரத்தில் சேரன் தங்கை காவ்யாவை சுகன்யா அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று செக் செய்வது என முதல் பாதி முழுவதும் இவர்கள் திருமண ஏற்பாடுகளாகவே செல்கின்றது.

அதிலும் திருமண மண்டபம் தேவையா, வந்தவர்கள் இதை சாப்பிடுவார்களா என்று தெரிந்துக்கொள்ளாமல் நம்ம இஷ்டத்திற்கு ஏதேதோ சமைத்து வைப்பது, ஒரு திருமண அழைப்பிதழுக்கு இத்தனை லட்சம் செலவு செய்வதா? என இன்று கௌரவத்திற்காக கடன் வாங்கி செலவு செய்வதா என்று சேரன் சுகன்யாவிடம் வாக்குவாதம் செய்யும் இடமெல்லாம் மிடில் க்ளாஸ் மக்களுக்கு கிடைக்கும் சவுக்கடியாக உள்ளது. ஆனால், கொஞ்சம் அவ்வபோது நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் என்ற தம்பட்டமும் எட்டிப்பார்க்கின்றது.

ஆசைகளை குறைக்க வேண்டும், எல்லா விஷயத்திலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும், பணத்தை அளந்து செலவு செய்ய வேண்டும் என்று சேரன் கூறுவது கேட்க நன்றாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் ஏதோ விழிப்புணர்வு பள்ளிக்கு வந்தது போல் தான் இருக்கின்றது.

இன்றைய ட்ரெண்ட் ஆட்களுக்காக தான் இந்த படமே இருப்பது போல் தெரிகின்றது, ஆனால், அவர்களை உட்கார வைத்து பார்க்கும்படி இருக்க வேண்டும் அல்லவா சேரன், இன்னமும் பழைய பார்முலாவிலேயே கதையை இழுத்துக்கொண்டே சென்றது தான் பொறுமையை சோதிக்கின்றது, அதுவும் கிளைமேக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஹீரோவிற்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியும் என்பதற்காகவே ஒரு பாடலை வைத்தது போல் இருப்பது உச்சக்கட்ட சோதனை.

படத்தின் இசை திருமணம் சார்ந்த படம் என்பதால் நாதஸ்வரம், மேளம் என்று பயன்படுத்தியது பாராட்டத்தக்கது, அதிலும் இரு வீட்டிலும் காதலை ஹீரோ, ஹீரோயின் சொல்வதை பாட்டாகவே வைத்தது ரசிக்கும்படி இருந்தது, ஒளிப்பதிவாளரும் கம்மி பட்ஜெட் படம் என்பதை உணர்ந்து செயல்பட்டுள்ளார்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம், இன்றைய கால ஆடம்பர திருமண நிகழ்வுகளின் விளைவுகளை காட்டியதற்காக பாராட்டுக்கள்.

நடிகர், நடிகைகளில் நடிப்பு, குறிப்பாக எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா இருவரும் தங்கள் குடும்ப கஷ்டத்தை சொல்லி அழும் இடம் செம்ம.

ஒன் லைன் என்றாலும் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பூட்டுகின்றார் பாலசரவணன்.

பல்ப்ஸ்

கொஞ்சம் பழைமையான மேக்கிங்.

பொறுமையை சோதிக்கும் திரைக்கதை.

மொத்தத்தில் இந்த திருமணத்தை யார் கொண்டாடுவார்களோ இல்லையோ, மிடில் க்ளாஸ் பெண் வீட்டார்கள் கொண்டாடுவார்கள்.