துப்பாக்கி முனை திரைவிமர்சனம்

விக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். அப்படி ஒரு போராட்டத்திற்கு விடையாக துப்பாக்கி முனை கதையை தேர்ந்தெடுத்தார், கண்டிப்பாக இப்படம் அவருக்கு திருப்பு முனை தரும் என எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றனர், துப்பாக்கி முனை திருப்பு முனை ஆனதா? பார்ப்போம்.

Dec 14, 2018 - 07:52
 0
துப்பாக்கி முனை திரைவிமர்சனம்
துப்பாக்கி முனை திரைவிமர்சனம்
துப்பாக்கி முனை திரைவிமர்சனம்
துப்பாக்கி முனை திரைவிமர்சனம்

விக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றார். அப்படி ஒரு போராட்டத்திற்கு விடையாக துப்பாக்கி முனை கதையை தேர்ந்தெடுத்தார், கண்டிப்பாக இப்படம் அவருக்கு திருப்பு முனை தரும் என எல்லோரும் எதிர்ப்பார்க்கின்றனர், துப்பாக்கி முனை திருப்பு முனை ஆனதா? பார்ப்போம்.

கதைக்களம்

விக்ரம் பிரபு மிகவும் மொரட்டுத்தனமான போலிஸ், அதே நேரத்தில் மிகவும் நேர்மையான போலிஸ் அதிகாரியும் கூட. மொத்தம் 33 என்கவுண்டர் செய்ததால், பெற்ற அம்மாவே அவரை விட்டு விலகி இருக்கும் நிலைமை.

ஹன்சிகாவுடன் காதல் சில காலம் போல, அதுவும் இந்த போலிஸ் வேலையால் பிரிய, கிட்டத்தட்ட ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம் என்ற மனநிலைக்கு செல்கிறார்.

நேர்மையாக இருப்பதால் போலிஸே சிலர் இவரை டார்க்கெட் செய்து சஸ்பெண்ட் செய்கின்றனர். அதை தொடர்ந்து சில அன் அபிஷியல் என்கவுண்டர் மட்டும் இவர் செய்ய, அப்போது ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை என்கவுண்டர் செய்யும் வேலை இவரிடம் வருகின்றது.

ஆனால், அதே நேரத்தில் அந்த பாலியல் பலாத்காரம் செய்தவர் யார் என்பது சிலபல டுவிஸ்டுடன் வந்து இரண்டாம் பாதி முடிகின்றது.

படத்தை பற்றிய அலசல்

விக்ரம் பிரபு இதுவரை நடித்த படங்களிலேயே சூப்பர் லுக் என்றால் இது தான், செம்மையாக இருக்கின்றார், தாடி, இறுக்கமான முகம் என்று நடிப்பில் இந்த படத்தில் ஸ்கோர் செய்கின்றார்.

ஹன்சிகா வழக்கம் போல் வந்து செல்கின்றார், இதை தவிர சொல்லும்படி ஏதும் இல்லை, இவர்களை எல்லாம் விட ஸ்கோர் செய்வது எம்.எஸ்.பாஸ்கர் தான்.

தன் மகளை இப்படி ஆக்கியவனை கண்டுபிடிக்க அவர் செய்யும் முயற்சிகள், மகள் நிலை குறித்து அவர் பேசும் போது ஏற்படும் சோகம் என மீண்டும் மீண்டும் தன்னை சிறந்த நடிகர் என நிரூபித்து வருகின்றார்.

ஆனால், எம்.எஸ்.பாஸ்கரே அனைத்தையும் கண்டுபிடிக்க, இதில் விக்ரம் பிரபுவிற்கு என்ன வேலை இருக்கின்றது என கேட்பதை தவிர்க்க முடியவில்லை.

ஒளிப்பதிவு படத்தின் பலம், இசை பல படங்களில் கேட்டது போலவே உள்ளது, அதுவும் தலை விடு தலை பாடல் எல்லாம் கேட்கின்றது.

க்ளாப்ஸ்

விக்ரம் பிரபுவின் லுக், இதே லுக்கில் சில காலம் பயணிக்கலாம் சார். எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு.

படத்தின் கதை, இன்றைய சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை கண்முன் காட்டியவிதம்.

கிளைமேக்ஸில் இந்தியாவில் நிகழும் பாலியல் பலாத்காரம் குறித்து வெளிப்படையாக பேசிய விஷயம்.

பல்ப்ஸ்

எம்.எஸ்.பாஸ்கரே அனைத்தையும் கண்டுபிடிக்க விக்ரம் பிரபுவிற்கு என்ன வேலை என்று நம்மையே கேட்க வைப்பது.

ஹன்சிகா எதற்கு வருகின்றார் எங்கு செல்கின்றார் பிறகு எப்படி வருகின்றார் என்பதே தெரியவில்லை.

மொத்தத்தில் துப்பாக்கி முனை, திருப்பு முனை இல்லை என்றாலும் ஒரு சில திருப்பங்களுடன் பார்க்க வைக்கின்றது.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor