பொன்னியின் செல்வன் படத்துக்காக தயாராகும் த்ரிஷா!

மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்திற்காக தயாராகி வரும் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் கதைப் புத்தகங்களை வாங்கிப் படித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்துக்காக தயாராகும் த்ரிஷா!
த்ரிஷா

மணிரத்னமின் பொன்னியின் செல்வன் படத்திற்காக தயாராகி வரும் நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் கதைப் புத்தகங்களை வாங்கிப் படித்து வருகிறார்.

லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க நடிகை த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

சீக்கிரமே பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் இணையவுள்ள த்ரிஷா, பொன்னியின் செல்வன் கதையை படிக்கத் தொடங்கியுள்ளார்.

த்ரிஷா

அமரர் கல்கி எழுதிய புனைவு நாவலான பொன்னியின் செல்வன் கதையை படமாக உருவாக்க எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல்ஹாசன் என பல ஜாம்பவான்கள் முயற்சி செய்தனர். ஆனால், இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தை பிரம்மாண்டமாக இயக்க மணிரத்னம் முடிவு செய்து தாய்லாந்தில் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார்.

ராஜ ராஜ சோழனின் பட்டப் பெயர் தான் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் நாவலில் பொன்னியின் செல்வன், ஆதித்ய கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினி, சுந்தர சோழ மகராஜா, குந்தவை, ஊமச்சி, பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், பாண்டிய மன்னன், அனிருத்த பிரம்மராயர் என பல பெரிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும்.

அதற்கான நட்சத்திரங்களை சரியாக வடிவமைத்தால் தான் பொன்னியின் செல்வன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், மெகா நட்சத்திரங்களின் கூட்டணியில் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கி வருகிறார் மணிரத்னம். சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜெயராம், லால், அஸ்வின், மோகன் ராமன், ரியாஸ் கான் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வனின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோயில்கள், யானைகள், தீவுகள் என பல விஷயங்கள் அங்கு இருப்பதால், பொன்னியின் செல்வன் முதல் ஷெட்யூலை பிரம்மாண்டமாக தாய்லாந்தில் படமாக்கி வருகிறார் மணிரத்னம்.

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறை இணைகிறார் நடிகை த்ரிஷா. ஆயுத எழுத்து படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக செம்ம மாடல் பொண்ணாக நடித்த த்ரிஷா, பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதற்காக பல பயிற்சிகளை தீவிரமாக பயின்று வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த குந்தவை பிராட்டி கதாபாத்திரம் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவி மற்றும் சியான் விக்ரமும் நாயகியாக நடித்த த்ரிஷா இந்த படத்தில் இருவருக்கும் சகோதரியாக நடிக்கவுள்ளார். வந்தியத்தேவனாக கார்த்தி நடித்தால் த்ரிஷா தான் அவருக்கு ஜோடியாக இருப்பார்.

பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் சீக்கிரமாக நடிகை த்ரிஷா இணையவுள்ளார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்திற்காக தயாராக முடிவு செய்த நடிகை த்ரிஷா, 5 புத்தகங்களையும் வாங்கி படித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தற்போது பதிவிட்டுள்ளார். த்ரிஷாவின் ரசிகர்கள், சீக்கிரம் உங்களை பொன்னியின் செல்வன் படத்தில் காண வெயிட்டிங் என கமெண்ட் செய்து வருகின்றனர்.