த்ரிஷா படத்திற்கு வந்த சிக்கல்!

ஒரு ஹிட் வேண்டும் என போராடிய த்ரிஷாவிற்கு 96 மற்றும் பேட்ட ஆகிய படங்கள் கைகொடுத்தது. அதன் பிறகு த்ரிஷா தற்போது சோலோ ஹீரோயினாக பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்துள்ளார்.

த்ரிஷா படத்திற்கு வந்த சிக்கல்!
த்ரிஷா

ஒரு ஹிட் வேண்டும் என போராடிய த்ரிஷாவிற்கு 96 மற்றும் பேட்ட ஆகிய படங்கள் கைகொடுத்தது. அதன் பிறகு த்ரிஷா தற்போது சோலோ ஹீரோயினாக பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் என்பதால் தற்போது சென்சார் போர்டுக்கு நடத்தை போட்டு காட்டியுள்ளனர். படத்தை பார்த்தவர்கள் U சர்டிபிகேட் கொடுக்க முடியாது என மறுத்துவிட்டனர்.

படத்தில் பல சர்ச்சையான காட்சிகள் இருப்பதால் UA சான்றிதழ் தருவதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான படக்குழு படத்தை மீண்டும் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த படம் மட்டுமின்றி த்ரிஷா நடிப்பில் பல படங்கள் இன்னும் ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கின்றன. சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை, சுகர் என பெரிய பட்டியலே உள்ளது.