வெள்ளைப்பூக்கள் திரைவிமர்சனம்
விவேக் தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா காமெடி நடிகர்களில் ஒருவர். ஆனால், இவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரும் கூட, ஒரு காமெடியனாக சிரிக்கவும் வைப்பார், நான் தான் பாலா மூலம் அழவும் வைப்பார், அந்த வகையில் ஒரு நாயகனாக விவேக் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சில வருடங்களாக போராட, இந்த வெள்ளைப்பூக்கள் வழி செய்ததா? பார்ப்போம்.

கதைக்களம்
விவேக் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி, அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் வீட்டிற்கு செல்கின்றார், மகன் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்ததால், தன் மகனிடம் விவேக் பேச மறுக்கின்றார்.
பிறகு அவரிடம் பேசினாலும், மருமகளிடம் பேசுவதே இல்லை, அந்த சமயத்தில் விவேக் வீட்டிற்கு அருகே இருக்கும் பெண் திடீரென்று காணாமல் போகின்றார்.
அதை தொடர்ந்து ஒரு வாலிபரும் கடத்தப்பட, ஒரு கட்டத்தில் விவேக்கின் மகனும் கடத்தப்பட, அதன் பிறகு என்ன ஆனது என்பதை விவேக் கண்டுப்பிடிக்கும் விறுவிறுப்பான திரைக்கதை தான் இந்த வெள்ளைப்பூக்கள்.
படத்தை பற்றிய அலசல்
அமெரிக்காவில் இருந்து யாரோ எடுத்திருக்கிறார்கள், படம் நல்ல இருக்குமா? நம்ம் ஊர் மக்களுக்கு பிடிக்குமா என்ற மனநிலையில் தான் பலரும் படத்திற்கு வந்தார்கள், ஆனால், படம் செம்ம விறுவிறுப்புடன் தான் செல்கின்றது, ஒரு கட்டத்திற்கு மேல் அடுத்த என்ன, அடுத்த என்ன என்று நம்மை கதையை விட்டு நகரவிடாமல் கொண்டு செல்கின்றது.
விவேக் ஒரு ஓய்வு பெற்ற போலிஸாகவும், கோபமான அப்பாவாகவும் மிரட்டியுள்ளார், விவேக்கின் பெஸ்ட் திரைப்படங்களில் இதுவும் ஒன்று, அதிலும் தன் மகன் கடத்தப்பட்ட பிறகு அவர் கண் கலங்கும் காட்சி நமக்கே அட இது விவேக் தானா என்று ஒரு நொடி யோசிக்க வைக்கின்றது, சூப்பர் விவேக் சார்.
சார்லீ தன் யதார்த்தமான நடிப்பில் ஸ்கோர் செய்கின்றார், படத்தின் டெக்னிக்கல் விஷயங்களான ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என அனைத்தும் தரம், கண்டிப்பாக ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை தான் தரும்.
க்ளாப்ஸ்
விவேக்கின் வித்தியாசமான நடிப்பு
படத்தின் திரைக்கதை
பல்ப்ஸ்
பெரிதாக சொல்ல ஏதுமில்லை.
மொத்தத்தில் வெள்ளைப்பூக்கள் ஒரு சர்ப்ரேஸ் பரிசு தான்