குத்துப்பாட்டுக்கு ஆடி கல்லா கட்டும் நடிகைகள்… ஸ்ருதி, தமன்னா இடையே கடும் போட்டி?

5 ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவில் குத்துப்பாடலுக்கு ஆடுவதற்கு என்றே நடிகைகள் பலர் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என பல நடிகைகள் கவர்ச்சி பாடலுக்கு ஆடி வந்தனர். ஹீரோயின்களே கவர்ச்சியாக நடிக்க களமிறங்கியதை அடுத்து ஐட்டம் பாடல்களுக்கு ஆடுபவர்களின் பிழைப்பில் விழுந்தது மண். இப்போதோ பிஸியாக நடித்து வரும் நடிகைகள் கூட ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட தயாராக இருக்கின்றனர்.

கவுதமி, ரோஜா, மீனா தொடங்கிய குத்தாட்டம், குஷ்பு வரை நீடித்தது. இப்போதோ நயன்தாரா, அஞ்சலி, ஸ்ருதிஹாசன், தமன்னா என்று நீள்கிறது. படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடும் வரிசையில் தற்போது தமன்னாவும் இணைந்து விட்டார்.

ஒரு படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தை ஒரே ஒரு குத்தாட்டம் போட்டு சம்பாதித்து விடுகிறார்கள் ஒரு சில நடிகைகள். 20 நாட்கள், 30 நாட்கள் என்று கால்ஷீட் கொடுத்து, நடித்து வாங்கும் சம்பளத்தை காட்டிலும் ஓரிருநாளில் ஒரு பாட்டில் ஆடி அந்த சம்பளத்தை பெற்றுவிடலாம் என்பதாலேயே குத்துப்பாடலுக்கு ஆட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

8. ஐட்டம் டான்ஸ் அஞ்சலி

அஞ்சலி

கதாநாயகியாக நடித்த போது குடும்ப குத்துவிளக்குகளாக நடித்த பல நடிகைகளும் இப்போது குத்துப்பாடலுக்கு ஆடி வருகின்றனர். தமிழில் சிங்கம் 2 தொடங்கி பல படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார் அஞ்சலி.

7. தெலுங்கில் ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

தமிழில் கதாநாயகியாக நடித்தாலும் பஞ்சமில்லாமல் கவர்ச்சி காட்டுவார் ஸ்ருதிஹாசன். தெலுங்கில் அதீத கவர்ச்சியில் குத்துப்பாடலுக்கு ஆட்டம் போடுகிறார் ஸ்ருதிஹாசன்.

 

6. கார்த்தி படத்தில் ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிக்கு இப்போது தொடர்ச்சியாக குத்துப் பாடல்களில் ஆட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன. கார்த்தி, நாகார்ஜுன், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘தோழா’ படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ருதிஹாசன் நடனமாடுவதாக கிசுகிசுக்கின்றனர்.

 

5. தமன்னாவும் ரெடி

தமன்னா

ஸ்ருதிஹாசனை தொடர்ந்து தற்போது தமன்னாவும் குத்துப் பாடலுக்கு நடனம் ஆட அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே ‘அல்லுடு சீனு’ படத்தில் லப்பர் பொம்மா பாடலுக்கு நடனம் ஆடிய தமன்னாவுக்கு அடுத்ததாக பெல்லம் கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைப்பு வந்துள்ளது. இந்த படத்தில் குத்து பாடலுக்கு ஆட தமன்னா ஓகே சொல்லிவிட்டாராம்.

4. பாலிவுட்டில் டாப் நடிகைகள்

பிரியாமணி

நடிகை பிரியங்கா சோப்ரா முதல் பிரியாமணி வரை ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகைகள் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். பார்பி டால் என்று அழைக்கப்படும் பாலிவுட்டின் செக்ஸி நடிகை கத்ரீனா கைப்பும், நிறைய குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார்.

 

3. தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே ஏராளமான குத்துப்பாடல்களுக்கு ஆடியிருக்கிறார். 2011ம் ஆண்டு வெளிவந்த தம் மாரோ தம் படத்தில் இவர் ஆடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இந்தப்பாட்டில் தீபிகாவின் கவர்ச்சியான உடை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

2. ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா

நடிகை ப்ரியங்கா சோப்ரா பிஸியாக நடித்து வந்தாலும் ஏராளமான குத்துப்பாடல்களில் ஆடியிருக்கிறார். “ராம் லீலா” படத்தில் இவர் ஆடிய ஐட்டம் டான்ஸ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

 

1. கரீனா கபூர்

கரீனா கபூர்

பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் பலரும் ஜோடி போட்டு நடித்தவர் கரீனா கபூர். நடிகை சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடிப்பதால் இப்போதும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.