அட்லீ-ஷாருக் படம் என்ன ஆனது?

பிகில் படம் மிக பிரம்மாண்ட ஹிட். அது 300 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூல் செய்தது. இந்த படத்திற்கு பிறகு அட்லீ எந்த நடிகரை இயக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் உள்ளது.

அட்லீ-ஷாருக் படம் என்ன ஆனது?
அட்லீ

பிகில் படம் மிக பிரம்மாண்ட ஹிட். அது 300 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூல் செய்தது. இந்த படத்திற்கு பிறகு அட்லீ எந்த நடிகரை இயக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் உள்ளது.

அட்லீ-ஷாருக் கான் இருவரும் இணையவுள்ளதாக கடந்த பல மாதங்களாக செய்திகள் வந்தது. ஆனால் தற்போது வரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை.

மேலும் அட்லீ சொன்ன கதை தனக்கு திருப்தி இல்லை என ஷாருக் கான் திருப்பி அனுப்பிவிட்டார் என கூறப்பட்டது. அவர் சொன்ன மாற்றங்களை செய்துவிட்டு அட்லீ தற்போது மீண்டும் ஷாருக்கிடம் கதை சொல்ல அட்லீ மும்பை சென்றுள்ளார்.

ஷாருக் பங்கேற்ற ஒரு விழாவில் அட்லீயும் கலந்துகொண்டுள்ளார். அவர் மும்பையில் ஷாருக் உடன் இருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.