மாஸ்டர் படப்பிடிப்பின் தற்போதைய நிலை என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ரசிகர்களால் மிக பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.

மாஸ்டர் படப்பிடிப்பின் தற்போதைய நிலை என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ரசிகர்களால் மிக பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக இளம் நடிகை மாளவிகா மோகன் நடித்து வருகிறார். நடிகை ஆண்ட்ரியாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாஸ்டர் படத்தின் மூன்று லூக்குகளும் வெளிவந்து மிக பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் விஜய்யின் குரலில் பாடி வெளிவந்த 'ஒரு குட்டி ஸ்டோரி' பாடல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவிலும் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் உள்ள பிரபல சுரங்கம் ஒன்றில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்திற்காக இன்னும் 12 நாட்கள் ஷூட்டிங் மட்டும் தான் இருக்கிறதாம். இத்துடன் படப்பிடிப்பு முடியவுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.