ஜாம்பி திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் எல்லாம் தற்போது யோகிபாபு கால்ஷிட் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு தான் வந்துவிட்டார்கள், அந்த வகையில் யோகிபாபுவை வைத்து இந்த ஜாம்பி பந்தயம் அடித்ததா? பார்ப்போம்.

Sep 6, 2019 - 17:52
 0
ஜாம்பி திரைவிமர்சனம்
ஜாம்பி திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் எல்லாம் தற்போது யோகிபாபு கால்ஷிட் இருந்தாலே போதும் என்ற நிலைக்கு தான் வந்துவிட்டார்கள், அந்த வகையில் யோகிபாபுவை வைத்து இந்த ஜாம்பி பந்தயம் அடித்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

தமிழ் சினிமாவில் ஜாம்பி படம் மிகவும் அரிதிலும் அரிது. அந்த வகையில் மிருதன் படம் ரசிகர்களிடம் கொஞ்சம் வரவேற்பு பெற்றது.

அதை தொடர்ந்து தற்போது காமெடி கலந்து வெளிவந்துள்ள படம் ஜாம்பி. பொண்டாட்டி கொடுமை, மாமியார் கொடுமை, அப்பா டார்ச்சர் என பரிதாபங்கள் கோபி, சுதாகர், மேலும் ஒரு நண்பர் என அனைவரும் சரக்கு அடிக்க செல்கின்றனர்.

செல்லும் இடத்தில் ஒரு சண்டை, அங்கிருந்து எஸ்கேப் ஆகி அவர்கள் ஒரு ரெசார்ட் செல்ல, அங்கு அனைவரும் ஜாம்பியாக மாறுகின்றனர். அதை தொடர்ந்து அவர்கள் எப்படி எஸ்கேப் ஆனார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜாம்பி படம் என்றாலே ஒரு வகையான திகில் இருக்க வேண்டும், சரி காமெடிக்கு என்று எடுத்துவிட்டார்கள் அதையாவது ஒழுங்காக செய்யவேண்டும். ஆனால், இங்கு காமெடி என்ற பெயரில் கழுத்தை தான் அறுக்கின்றனர்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அந்த ஜாம்பி நம்மையே கடித்திருக்கலாம் என்று தோன்ற வைக்கின்றது. கோபி, சுதாகர் பரிதாபங்கள் வீடியோவை நாள் முழுவதும் பார்த்த நமக்கு இதில் உச்சக்கட்ட சோதனை. கொஞ்சம் கவனமாக படத்தை தேர்ந்தெடுங்கள் சோபி, சுதாகர் அவர்களே.

படத்தின் பல காட்சிகள் எந்த ஒரு கண்டினியூட்டி இல்லை, அதை விட லாஜிக் என்பது துளி அளவும் இல்லை, காமெடி படம் தான் அதற்காக இப்படியா...

அதிலும் வீட்டை விட்டு ஓடி வருபவர்களை ஒருவர் கூட போன் செய்து விசாரிக்கவில்லை என்பது அநியாயத்திற்கு பூசுற்றல். போதாத குறைக்கு கொஞ்சமாவது யோகிபாபு காப்பாற்றுவார் என்று பார்த்தால் அவரும் தன் பங்கிற்கு கடிக்கின்றார்.

ப்ரேம்ஜி அவர் இசைக்கு கைத்தட்டல் வருகிறதோ இல்லையோ, காப்பியடித்து போடும் இசைக்கு கைத்தட்டல் வருகிறது. காருக்கு எதற்கு அச்சாணி என்பது போல் யாஷிகா, பிஜிலி ரமேஷ் காமெடிக்கு வந்த சிரிப்பு கூட வேறு யாருக்கும் வரவில்லை.

க்ளாப்ஸ்

படத்தின் ஜாம்பிக்கு போடப்பட்ட மேக்கப், நன்றாக இருந்தது.

பல்ப்ஸ்

மற்ற அனைத்தும்.

மொத்தத்தில் ஜாம்பியிடம் மாட்டியது அவர்கள் இல்லை, நாம் தான்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor