விஜய்யுடன் படம் பண்ணும் ஐடியா இருக்கா இல்லையா? சிறுத்தை சிவா கூறிய அசத்தலான பதில்

கார்த்தி நடித்திருந்த சிறுத்தை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் சிவா. இதனாலேயே அவர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களை எடுத்திருந்தாலும் சிறுத்தை சிவா என்ற அடையாளத்துடனே உள்ளார்.

Nov 28, 2018 - 15:00
 0
விஜய்யுடன் படம் பண்ணும் ஐடியா இருக்கா இல்லையா? சிறுத்தை சிவா கூறிய அசத்தலான பதில்
இயக்குனர் சிவா

கார்த்தி நடித்திருந்த சிறுத்தை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் சிவா. இதனாலேயே அவர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என 4 படங்களை எடுத்திருந்தாலும் சிறுத்தை சிவா என்ற அடையாளத்துடனே உள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டியில் ரசிகர்கள் கேட்ட, தல அஜித்துடன் தொடர்ந்து இணையும் உங்களுக்கு, தளபதி விஜய் படத்தை இயக்கும் ஐடியா இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.

அதில், விஜய் சாரை ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே எனக்கு ரொம்ப நல்லா தெரியும். எங்கப்பாவும் விஜய் சார் அப்பாவும் நெருங்கிய நண்பர்கள். வேதாளம் படத்துக்கு முன்னாடி நானும் விஜய் சாரும் சந்தித்து பேசினோம். கண்டிப்பாக அவரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. சீக்கிரம் அது நடக்கும் என நம்புகிறேன் என்றார்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor