‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க!

கர்ணனாக விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க!
விக்ரம்
‘இந்த’ கெட்டப்புல சத்தியமா இதுக்கு முன்னாடி சீயானை நீங்க பார்த்திருக்க மாட்டீங்க!

கர்ணனாக விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

என்னு நின்டே மொய்தீன்' எனும் மலையாள படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்கும் சரித்திர படம் மஹாவீர் கர்ணா. இதில் கர்ணனாக நடிக்கிறார் சீயான் விக்ரம். 

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில், தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் எடுக்கப்படவுள்ளது. ஒரு வருடத்துக்கும் மேலாக இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார் இயக்குனர் விமல். 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு, திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் இயக்குனர் விமல், நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நடிகர் சுரேஷ் கோபி இதில் துரியோதனன் வேடத்தில் நடிக்கிறார். 

பூஜையின் போது படத்தில் கர்ணனின் 30 அடி உயரமுள்ள தேரில் பயன்படுத்தப்பட உள்ள மணி, படக்குழுவினரிடம் வழங்கப்பட்டது. இந்த கோயில் மணி படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர். 

கமல் தயாரிப்பில் செல்வா இயக்கிவரும் கடாரம்கொண்டான் படத்தில் விக்ரம் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு கர்ணனாக அவர் நடிக்க இருக்கிறார். இதுவரை வரலாற்றுப் படங்கள் எதிலும் விக்ரம் நடித்ததில்லை என்பதால், இப்படத்தின் போஸ்டரை ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். 

அதோடு இப்படம் விக்ரமிற்கு இந்தியில் மூன்றாவது படம். முதலில் மணிரத்னத்தின் ராவணா படத்தில் நடித்திருந்தார். அடுத்து டேவிட் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.