ஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா!
ஆரஞ்சு நிற உடையில் கத்ரினா கைஃப் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆரஞ்சு நிற உடையில் கத்ரினா கைஃப் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரினா கைஃப். தனது சிறுவயதிலேயே மாடலிங் துறையை தேர்ந்தேடுத்த கத்ரினா கைஃப் தன் முதல் மாடலிங்காக லண்டனில் நடைபெற்ற பேஷன் விக்கில் கலந்து கொண்டு அங்கு வந்த ஒரு இயக்குனர் இவரை பார்த்து தனது முதல் படத்தில் நடிக்க வைத்தார். மேலும், இந்தியாவில் நடந்த பேஷன் விக் அழகி போட்டியிலும் கலந்து கொண்டார் கத்ரினா.
கிங் பிஷர் நிறுவனம் வெளியிட்ட முதல் கேலண்டரில் கத்ரினாவின் புகைபடம் இடம் பெற்றது. இதன் பின் பல விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார் கோகோ கோலா, சாம்சங் போன்ற பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்தார். இவர் இந்தி திரையுலகில் பும் என்ற படத்தில் அறிமுகமானார். பின் அபிஷேக் பச்சன் உடன் நடித்த சர்கார் திரைப்படம் தான் இந்தியில் இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்த படத்திலேயே சல்மான் கான், சுஷ்மிதா சென் நடித்த திரைப்படத்தில் நடித்தார். இதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த கத்ரினா கைஃப் கவர்ச்சியை கையில் எடுத்தார். இவர் அக்னிபத் படத்தில் ஆடிய நடனம் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவர் நடித்த அதிக படங்கள் வெற்றி பெற்றதால் இவர் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார்.
அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடும் கத்ரினா கைஃப், தற்போது ஆரஞ்சு கலரில் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்க்கும் இவரது ரசிகர்கள் வெயிலுக்கு இதமா இருக்கும் ஆரஞ்சு பழம் போல இருக்குறீங்க என்றும் ஆரஞ்சு பழத்தை உறித்தால் உள்ளே இருக்கும் சுலை போல பார்க்க அழகா இருக்கீங்க என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






