ராஷ்மிகா, சமந்தாவை தொடர்ந்து புஷ்பா 2வில் மற்றொரு முன்னணி நடிகை!

சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார்.

ராஷ்மிகா, சமந்தாவை தொடர்ந்து புஷ்பா 2வில் மற்றொரு முன்னணி நடிகை!
ராஷ்மிகா, சமந்தா

சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார்.

சமந்தா இப்படத்தில் இடம்பெற்ற ஸ்பெஷல் பாடலுக்கு நடனம் ஆடி படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக இருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இப்படத்திலும் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு சமந்தா நடனம் ஆடுவார் என்று கூறப்படுகிறது. மற்றொரு புறம் இப்படத்தில் அவர் கமிட்டாகவில்லை என்றும் கூறுகிறார்கள்.

சாய் பல்லவி

இந்நிலையில் ராஷ்மிகா, சமந்தாவை தொடர்ந்து முன்னணி நடிகை சாய் பல்லவியும் புஷ்பா 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் பழங்குடி பெண் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க தான் படக்குழு அவரை அணுகியதாகவும் கூறுகின்றனர்.