ஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ரசிகர்களாக பெற்றவர் சிவகார்த்திகேயன். அவரின் நடிப்பில் அடுத்ததாக ஹீரோ படம் நாளை உஅலகம் முழுக்க வெளியாகவுள்ளது.

Dec 19, 2019 - 15:56
 0
ஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்!
சிவகார்த்திகேயன்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் ரசிகர்களாக பெற்றவர் சிவகார்த்திகேயன். அவரின் நடிப்பில் அடுத்ததாக ஹீரோ படம் நாளை உஅலகம் முழுக்க வெளியாகவுள்ளது.

துப்பறிவாளன் பட புகழ் இயக்குனர் மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தை அடுத்து அவர் கோலமாவு கோகிலா படத்தின் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆனால் இப்படம் தாமதமாகியுள்ளால் ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தாமதமானாலும் பரவாயில்லை. படத்தை சொன்னபடி குறித்த பட்ஜெட்டில் சிறப்பாக செய்ய வேண்டும். மேலும் ஒரு படத்தை ரவிக்குமாரில் இயக்கத்தில் 2021 ல் நடித்து தரவுள்ளேன் என கூறியுள்ளார்.

வரும் 2020 ல் ஆகஸ்ட் மாதத்திலும், தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி 2 படங்களை வெளியிட விரும்புகிறாராம். இதில் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor