நயன்தாரா போல மாறிய அனுபமா பரமேஸ்வரன்!

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர். அதற்கு பிறகு அவர் தமிழ் மற்றும் தெலுங்கில் படங்களில் நடித்து வருகிறார்.

நயன்தாரா போல மாறிய அனுபமா பரமேஸ்வரன்!
Anupama Parameswaran

தெலுங்கில் அவர் தற்போது கார்த்திகேயா 2 படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் முதலில் ஜூலை 22 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆகஸ்ட் 22ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அனுபமா ப்ரோமோஷனில் கலந்துகொள்ளவில்லை.

நயன்தாரா போல மாறிய அனுபமா

நயன்தாரா தனது பட ப்ரோமோஷன்களுக்கு வருவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது அதே பாலிசியை அனுபமா எடுத்து இருப்பது கடும் விமர்சனத்திற்க்கு உள்ளானது.

அது பற்றி ட்விட்டரில் விளக்கம் அளித்து இருக்கும் அவர், தான் மற்ற படங்களில் பிசியாக இருப்பதால் கார்த்திகேயா 2 ப்ரோமோஷனுக்கு வர முடியாது என கூறி இருக்கிறார்.