லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் நடிப்பதை உறுதி செய்த முன்னணி நடிகர்!
வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த மாதத்தின் இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.

வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 67. இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இந்த மாதத்தின் இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.
இப்படத்தில் 6 வில்லன்கள் என்று தகவல் வெளியானது. இதில் பிரித்விராஜ், சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் ஆகியோர் கமிட்டாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதே போல் திரிஷா மற்றும் சமந்தா இருவரும் முதல் முறையாக இப்படத்தில் இணைகிறார்கள் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரமாண்டமாய் தயாராகி வரும் தளபதி 67 படத்தில் இவர்களுடன் மற்றொரு முன்னணி நடிகரும் இணைந்துள்ளார். அவர் வேற யாருமில்லை நகைச்சுவை நடிகர் யோகி பாபு தான்.
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தனக்கு கொடுத்துள்ளார் என்றும் அதற்க்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சமீபத்தில் மீடியாவை சந்தித்தபோது யோகி பாபு கூறியுள்ளார். இவர் கூறிதை தற்போது விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
ஏற்கனவே மெர்சல், சர்கார், பிகில், பீஸ்ட் மற்றும் தற்போது உருவாகி வரும் வாரிசு என ஐந்து முறை விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள யோகி பாபு, மீண்டும் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் எப்போது வெளியிட போகிறது என்று..






