விஜய் படத்திற்காக தான் இந்த முடிவு: லோகேஷ் கனகராஜ் விளக்கம்

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்து தளபதி விஜய் உடன் தான் கூட்டணி சேர்கிறார்.

விஜய் படத்திற்காக தான் இந்த முடிவு: லோகேஷ் கனகராஜ் விளக்கம்
லோகேஷ் கனகராஜ்

தளபதி67

வாரிசு படத்தை முடித்தபிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் நடிக்க இருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

படத்திற்காக லோகேஷ எடுத்த முடிவு

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் இறங்கி இருப்பதால் தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார்.

ஸ்கிரிப்ட் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட அவர் முடிவெடுத்து இருப்பது தற்போது இதன் மூலம் உறுதியாகி இருக்கிறது.