இரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு!

விஜய்யின் சர்கார் படம் வெளியான 2 வாரங்களில் உலக அளவில் ரூ. 247 கோடி வசூல் செய்துள்ளது.

இரண்டே வாரத்தில் 'சர்கார்' வசூல் ரூ. 247 கோடிப்பு!
சர்கார்

விஜய்யின் சர்கார் படம் வெளியான 2 வாரங்களில் உலக அளவில் ரூ. 247 கோடி வசூல் செய்துள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்த சர்கார் படம் கடந்த 6ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸானாது.

படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்தது.

சர்கார் படம் ரிலீஸான இரண்டு வாரங்களில் உலக அளவில் ரூ. 247 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது வரை சர்கார் படம் ஓடும் தியேட்டர்களில் 60 சதவீத இருக்கைகள் ஃபுல்லாக உள்ளது. பட வசூல் விரைவில் ரூ. 250 கோடியை தாண்டும் என்று நம்பப்படுகிறது.

சர்கார் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 176 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 71 கோடியும் வசூலித்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற நாடுகளிலும் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருகிறது சர்கார்.

சர்கார் படத்திற்கு அதிமுக அரசு சார்பில் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சைக்குரிய காட்சிகளை மறுதணிக்கை செய்து நீக்க வைத்தார்கள். அதனால் படத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. மாறாக இலவச விளம்பரம் கிடைத்து வசூலில் சாதனை மேல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் விரைவில் சேர உள்ளது சர்கார்.

சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் வருண் கூறியதாலும் வசூல் பாதிக்கப்படவில்லை. பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டும் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.