விஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா

விஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா
சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த NGK படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கி முடிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கிய இந்த படம் பெரிய தாமதத்திற்கு பிறகு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.

ஜனவரி 12ம் தேதி இறுதி நாளில் நடிகர் சூர்யா 120 பேர் கொண்ட மொத்த NGK படக்குழுவுக்கும் ஒரு சவரன் தங்கக்காசு கிப்ட்டாக கொடுத்துள்ளார்.

வழக்கமாக நடிகர் விஜய் தான் தன் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் படக்குழுவுக்கு தங்கக்காசு பரிசாக கொடுத்து மகிழ்விப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையே தற்போது சூர்யாவும் பின்பற்றியுள்ளார்.