விவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்!
கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழும் ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழும் ஏழை மாணவியின் மருத்துவ படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தஞ்சை பேராவூரணி அருகில் உள்ள பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சஹானா. கஜா புயலில் சேதமடைந்த குடிசை வீட்டில் வசித்து வரும் அவர் பிளஸ் 2 தேர்வில் 600க்கு 524 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இது குறித்து ஆசிரியர் ஒருவர் ட்வீட் செய்தார்.
மின்சாரமில்லாத, கஜா புயலில் விழுந்த குடிசை வீட்டில் வாழ்ந்து கொண்டு மன உறுதியோடு படித்து,நடந்து முடிந்த ப்ளஸ் டூ தேர்வில் 600 க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார்,தஞ்சாவூர் பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த மாணவி சஹானா.
#ஊக்கமது_கைவிடேல் என்று ஆசிரியர் செல்வம் ட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.
மருத்துவம் படிக்க விரும்பும் சஹானாவுக்கு உதவி செய்யக்கோரி இயக்குநர் சரவணன் ட்வீட் செய்தார். சரவணன் ட்வீட் போட்டது வீண் போகவில்லை. சஹானாவுக்கு உதவி கிடைத்துவிட்டது.
சரவணன் ட்வீட் போட்ட வேகத்தில் சஹானாவின் முழு படிப்பு செலவையும் ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அவருக்கு சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒரு ஏழை மாணவியின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகள் வந்து குவிகின்றது. நீங்க நல்லா இருக்கணும் என்று பலரும் வாழ்த்துகிறார்கள்.
பதிவிட்ட சில நிமிடங்களிலேயே சஹானாவின் முழு கல்வி செலவையும் ஏற்பதாக சொன்னார் சிவகார்த்திகேயன். விவசாயி நெல் ஜெயராமன் மகனின் கல்வி செலவை ஏற்றது போலவே, சஹானாவின் கூலி விவசாய குடும்பத்திலும் விளக்கேற்றி வைக்கிறார் சிவகார்த்திகேயன். உதவும் உள்ளமே இறைவன் வாழும் இல்லம். கோடி நன்றிகள்! https://t.co/XLVPXHhxvg — இரா.சரவணன் (@erasaravanan) April 24, 2019






