திருமணம் எப்போது தான்? நடிகை தமன்னா கூறிய பதில்!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் நடித்த தேவி-2 படம் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவந்தாலும், தமன்னாவின் நகைச்சுவை நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

திருமணம் எப்போது தான்? நடிகை தமன்னா கூறிய பதில்!
தமன்னா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் நடித்த தேவி-2 படம் இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவந்தாலும், தமன்னாவின் நகைச்சுவை நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

மேலும் இந்த படத்திற்காக படம் வெளியாவதற்கு முன்தினம்தான் படத்திற்கான பிரமோஷன் பேட்டிகளை கொடுத்தார்கள் படக்குழுவினர். அவையெல்லாம் பட வெளியீட்டிற்கு பின்னர்தான் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.

அப்படி தந்த ஒரு பேட்டியில் தமன்னா அவருடைய திருமணம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலில், முதலில் திருமணத்திற்காக ஒருவரை நான் கண்டுபிடிக்க வேண்டும். இப்படத்தின் இயக்குனர் விஜய்யிடம் கூட யாராவது பொருத்தமானவர் இருந்தால் சொல்லுங்கள் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தேன் என்றார்.

ஏற்கெனவே, ஆர்யா - சாயிஷா திருமணத்தை முன்னின்று நடத்தி முடித்தவர் இயக்குனர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.