பிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்!
அர்ஜுன் ரெட்டி படம் புகழ் ஷாலினி பாண்டே வெளியிட்ட பிகினி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டி படம் புகழ் ஷாலினி பாண்டே வெளியிட்ட பிகினி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை கிண்டல் செய்துள்ளனர்.
விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே. அவர் தற்போது தெலுங்கு தவிர்த்து தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜீவாவின் கொரிலா படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜி.வி. பிரகாஷின் 100% காதல் படத்திலும் நடித்துள்ளார்.
மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சைலன்ஸ் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஷாலினி பாண்டே பிகினி அணிந்து புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். நடிகை ஒருவர் தனது பிகினி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவது புதிது அல்ல. இந்நிலையில் ஷாலினியின் பிகினி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
ஷாலுமா, நீங்க எல்லாம் ஹோம்லி லுக் உள்ள பெண், இப்படி பிகினி அணியலாமா என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நம் தமிழ் ரசிகர்களோ, என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கலாய்த்துள்ளனர். தயவு செய்து இனி இது போன்று பிகினி போட்டோவெல்லாம் வெளியிடாதீர்கள் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிலரோ, அவரை மிகவும் கேவலமாக பேசியுள்ளனர். சிலரோ, என்ன பாலிவுட் செல்லும் ஐடியாவில் உள்ளீர்களா, அதற்கு முன்னோட்டமாக இந்த பிகினி புகைப்படங்களா என்று கேட்டுள்ளனர்.
ஷாலினி பாண்டே பிகினி அணிவதும் அணியாததும் அவர் இஷ்டம். அப்படி இருக்கும்போது அவரை ஒரு பெண் என்றும் பாராமல் அசிங்கமாக கமெண்ட் போடுகிறார்கள். பாலிவுட் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு பிகினி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களை நெட்டிசன்கள் விளாசாமல் இல்லை. இருப்பினும் அதை எல்லாம் அவர்கள் கண்டு கொள்வது இல்லை.
சொல்லப் போனால் பிகினி அணிந்தால் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக சில நடிகைகள் கடுமையான டயட் எல்லாம் இருந்து உடல் எடையை குறைக்கிறார்கள். நம் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகை ஒருவர் கூட அப்படித் தான் செய்தார். ஆக, பிகினி அணிவது சவுகரியமாக இருந்தால் அணிய வேண்டியது தான். அதற்காக ஒரு பெண்ணை விளாசுவது சரி அல்ல.






