பூமி திரைவிமர்சனம்
கொரோனா தாக்கம் காரணமாக பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படம் தற்போது வரை முன்னணி ஓடிடி தளங்களில் வெளியாகி வெற்றிகண்டு வருகிறது. அந்த வரிசையில் லக்ஷ்மணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் விவசாயிகளின் கஷ்டத்தை எடுத்து காட்டும் வகையில் பூமி திரைப்படம் இன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருந்த இப்படம் அவர்களின் எதிர்பார்ப்பை ஓடிடி மூலம் பூமி திரைப்படம் முழுமையடைய செய்ததா? இல்லையா? பார்ப்போம்..

கதைக்களம்
நாசாவில் பணியாற்றும் பூமிநாதன் விடுமுறைக்காக, தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். அங்கே விவசாயிகள் படும் கஷ்டத்தை பார்த்து, இங்கேயே தங்கி அவர்களுக்கு உதவி செய்ய முடிவுசெய்கிறார்.
ஆனால், சொந்தமாக விவசாயம் செய்யவிடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏகப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதனை முயியடித்து விவசாயிகளையும், விவசாயத்தையும் எப்படி ஜெயம் ரவி காப்பாற்றுகிறார் என்பது தான் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கடும் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடனால் துன்பத்திற்குள்ளாகும் நிஜமான ஒரு பிரச்சனையில் படம் துவங்கினாலும், நேரம் செல்லச்செல்ல பிரச்சனையை விரிவாக அணுகும் முயற்சியில் படம் திசைமாறி செல்கிறது.
படம் முழுக்க கதாநாயகன் விவசாயத்தின் சிறப்பு, அதற்கு எதிரான சதி என்று தொடர்ந்து வசனங்களைப் பேசிக்கொண்டேயிருக்கிறார். வாட்சாப்களில் வரும் விவசாயம் தொடர்பான கருத்துகள் காட்சிகளாக தெரிகின்றன. முடிவில், ஒருவழியாக வந்தே மாதரம் கோஷத்துடன் வெற்றிபெறுகிறார் கதாநாயகன்.
விவசாயம் VS கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று கதையை உருவாக்கியிருக்கும் இயக்குனர், அதற்கு ஏற்றபடி நம்பக்கூடிய வகையில் திரைக்கதையை அமைக்காததால் சற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமளிக்கிறது பூமி திரைப்படம்.
கதாநாயகி உட்பட மற்ற கதாபாத்திரங்கள் யாருக்கும் பெரிதாக நடிப்பதற்கு இடமில்லை. இமானின் இசை நன்றாக இருந்தாலும், படத்தில் காட்டும் சில பிரச்சனைகள் அந்த பாடல்களை ரசிக்கவிடாமல் செய்கிறது.
இயக்குனர் லக்ஷ்மணன் விவசாயிகளின் பிரச்சனையை உணர்ச்சியுடன் கூறியுள்ளாரே தவிர, அதனை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் எடுத்து செல்லவில்லை.
க்ளாப்ஸ்
Dudley ஒளிப்பதிவு
இமானின் இசை
கதைக்களம்
பல்ப்ஸ்
திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை
இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்
மொத்தத்தில் ஜெயம் ரவியின் பூமி சற்று ஏமாற்றத்தை தந்திருந்தாலும், பொங்கல் தினத்தன்று குடும்பத்துடன் ஒன்றாக பார்க்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.