ஈஸ்வரன் திரைவிமர்சனம்

கொரோனா தாக்கத்திலும் மிகவும் குறுகிய காலகட்டத்தில் விறுவிறுப்பாக எடுத்து முடித்த படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா நடிப்பில் சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஈஸ்வரன் எனும் தலைப்பை கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அருளை வழங்கியதா? இல்லையா? அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்று பார்ப்போம்.

Jan 15, 2021 - 19:27
 0
ஈஸ்வரன் திரைவிமர்சனம்
ஈஸ்வரன் திரைவிமர்சனம்

கொரோனா தாக்கத்திலும் மிகவும் குறுகிய காலகட்டத்தில் விறுவிறுப்பாக எடுத்து முடித்த படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா நடிப்பில் சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக இப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஈஸ்வரன் எனும் தலைப்பை கொண்ட இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அருளை வழங்கியதா? இல்லையா? அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்று பார்ப்போம்.

கதைக்களம்

ஒரு சின்ன ஊரில் விவசாயியாக வாழ்ந்து வரும் பெரியசாமியின்(பாரதிராஜா) மனைவி இறந்துவிடுவார் என்று கிராமத்தில் இருக்கும் பிரபல ஜோதிடர் கணிப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது.

அவர் கணித்த சில நிமிடங்களில் பெரியசாமியின் மனைவி இறந்துவிடுகிறார். கடினமாக உழைக்கும் விவசாயியான பெரியசாமி தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக நின்று வளர்த்து வருகிறார்.

ஆனால் வளர்ந்த பிறகு அந்த பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் பிசியாகி விடுகிறார்கள். 25 ஆண்டுகள் கழித்து பெரியசாமியின் மனைவி இறந்த நாளில் அவரை பார்க்க பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் வருகிறார்கள். அவர்களை எல்லாம் பார்த்து பெரியசாமி சந்தோஷப்படுகிறார்.

பெரியசாமியை பார்த்துக் கொள்ளும் ஈஸ்வரனும் { சிம்பு } சந்தோஷப்படுகிறார். பெரியசாமிக்கு சிறையில் இருந்த ஒரு குற்றவாளியால் தன் குடும்பத்திற்கு பிரச்சனை வரும் என்பது தெரியாது.

ஆம் ஓர் கதையில் நல்லவன் என ஒருவன் இருந்தால் வில்லன் இருக்கதானே ஆகவேண்டும். அப்படி பெரியசாமியின் குடும்பத்தை பழிவாங்க துடிக்கிறான் ரத்னசாமி (ஸ்டண்ட் சிவா). குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்படும் என்று ஜோதிடர் சொல்ல நிலைமை மோசமாகிறது.

இதன்பின் அந்த பிரச்சனையில் இருந்து அந்த குடும்பத்தை கதாநாயகன் ஈஸ்வரன் எப்படி காப்பாத்துகிறார். அந்த பிரச்சனையில் இருந்து அந்த குடும்பம் எப்படி மீண்டது என்பது தான் படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

சிம்புபின் கிராமத்து வாசம் வீசும் நடிப்பு படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஈஸ்வரனை ரூட் விடும் மாமன் மகளாக ஜொலித்திக்கிறார் நாயகி நிதி அகர்வால். இருந்தாலும் ஹீரோயினுக்கு படத்தில் பெரிதும் வேலையே இல்லை. எமோஷனல் காட்சிகள் பெரிதும் ஈர்க்கப்படவில்லை.

ஈஸ்வரனின் நண்பராக குட்டி புலி என ரோலில் கலக்கியிருக்கிறார் பால சரவணன். டைமிங் காமெடி, எதார்த்தமான நடிப்பு என கிராமத்து கதைகளுக்கு ஏற்ற ஒருவராக விளங்கினார் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பாரதிராஜா அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். பாலசரவணன், முனிஷ்காந்த் ஆகியோர் ரசிகர்களை கவர்கிறார்கள். மற்றபடி ஏற்கனவே தெரிந்த கதையை தான் படமாக்கியிருக்கிறார் சுசீந்திரன்.

க்ளாப்ஸ்

தமனின் இசை

சிம்புவின் கிராமத்து நடிப்பு

பாரதிராஜாவின் எதார்த்தம்

பல்ப்ஸ்

ஏற்கனவே பார்த்த கதை தான்

நிதி அகர்வாலின் நடிப்பு

இன்னும் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கலாம்

மொத்தத்தில் பொங்கல் நாள் அன்று ஈஸ்வரன் ஆண்டியுள்ள இந்த ஆட்டம் குடும்ப ரசிகர்கள் பார்த்து மகிழலாம்..

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor