நயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர கதாநாயகியாக விளங்கி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா.

நயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன்!
நயன்தாரா, மாளவிகா மோகனன்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர கதாநாயகியாக விளங்கி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா.

இவரது நடிப்பில் தற்போது நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக காத்துருக்கிறது. மேலும் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை நயன்தாராவை குறிப்பிட்டு, மாஸ்டர் பட கதாநாயகி நடிகை மாளவிகா மோகனன் கிண்டல் செய்துள்ளார்.

சமீபத்தில் மாஸ்டர் படத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் பேசிய மாளவிகா " நான் பார்த்ததில் மிகவும் நகைச்சுவையான சினிமா காட்சி, மிகப்பெரிய ' லேடி சூப்பர் ஸ்டார் ' நடிகை ஒருவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் காட்சியில் முழு மேக்கப் போட்டுகொண்டு நடித்தது தான் " என்று கூறியுள்ளார்.

இதனை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் மாளவிகா மோகனன் கூறியது, ராஜா ராணி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை குறிப்பிட்டு தான் கூறியுள்ளார் என்று, நயன்தாராவின் ரசிகர்கள் பலரும் மாளவிகாவின் மேல் கடுப்பில் திட்டி வருகின்றனர்.