உடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்!

மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு அந்த வகையில் மலையாளத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் மீரா ஜாஸ்மின் இவர் மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தவர்.

உடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா ஜாஸ்மின்!
மீரா ஜாஸ்மின்

மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு அந்த வகையில் மலையாளத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர் மீரா ஜாஸ்மின் இவர் மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தவர்.

இவர் தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியாகிய ரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாகவே ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார், முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்ததால் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்தது விஜயுடன் புதியகீதை திரைப்படத்திலும் அஜித்துடன் ஆஞ்சநேயா திரைப்படத்திலும் நடித்து வந்தார். வந்த வேகத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகப் பெரிய நடிகையாக மாறினார்.

அதன் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகிய சண்டக்கோழி திரைப்படம் மீராஜாஸ்மினை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது, மீண்டும் பரபரப்பான நடிகையாக மாறினார் மீரா ஜாஸ்மின் அதன்பிறகு நடித்த சில திரைப்படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை அதனால் கொஞ்சம் சினிமாவில் சறுக்கியது.

இந்த நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இடைவெளி விட்டு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த மீரா ஜாஸ்மின் கடைசியாக சிம்புவுடன் இங்க என்ன சொல்லுது என்ற திரைப்படத்தில் நடித்தவர் அதன்பிறகு தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார். பிறகு 2014ஆம் ஆண்டு துபாயில் பிரபல இன்ஜினியர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார்.