மாஸ்டர் மாளவிகா மோகனனின் வேண்டுகோள் !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் முடிவடைந்தது. பின்னர் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

மாஸ்டர்  மாளவிகா மோகனனின் வேண்டுகோள் !
மாளவிகா மோகனன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் முடிவடைந்தது. பின்னர் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

படம் கோடை விடுமுறைக்காக வரும் ஏப்ரல் 9 ல் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் நோயால் படம் ரிலீஸ் தள்ளிப்போகும் சூழ்நிலையில் உள்ளது. இருப்பினும் திட்டமிட்டப்படி படம் வெளியாக வேண்டும் என்பதில் இயக்குனர் உறுதியாக இருக்கிறாராம்.

மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது கொரோனா கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் என்னுடைய அப்பா அம்மாவுக்காக வீட்டிலேயே நான் இருக்கிறேன். என் பெற்றோர்கள், சகோதரர், அன்புக்குரியவர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் ஆரோக்கியம் முக்கியம். பொறுப்பு இல்லாமலும், அலட்சியமாகவும் நாம் இருந்தால் தீங்கு நேரிடும். ஆகவே வீட்டில் இருந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவோம்.