தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

May 27, 2022 - 17:12
 0
தளபதி 66 படத்தின் அடுத்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
தளபதி 66

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சங்கீதா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில், விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த் போன்ற நடிகர்கள் கலந்துகொண்டனர். அந்த புகைப்படங்களை கூட பிரகாஷ் ராஜ் வெளியிட்டிருந்தார்.

லேட்டஸ்ட் அப்டேட் 

இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது என விஜய் மற்றும் வம்சி இருக்கும் புகைப்படத்துடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வருகிற ஜூன் 2ஆம் தேதி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor