திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம்

தனுஷ் நடிப்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Aug 23, 2022 - 00:35
 0
திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம்

தனுஷ் நடிப்பில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் திரைக்கு வந்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக தனுஷை ஓடிடியில் கண்டு ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள், திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் தனுஷை திரையில் காண மிகுந்து எதிர்பார்ப்புடன் இருந்தனர். அத்தகைய எதிர்பார்ப்பை திருச்சிற்றம்பலம் முழுமையாக பூர்த்தி செய்தாரா? இல்லையா? விமர்சனத்தில் காண்போம்..

கதைக்களம்

டெலிவரி பாய் வேலை செய்து வரும் {திருச்சிற்றமபலம்} தனுஷின் வாழ்க்கையில் ஏற்படும் ஒரு விபத்தின் காரணமாக தனது அப்பா பிரகாஷ் ராஜிடம் கடந்த 10 வருடமாக பேசாமல் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். சிறு வயதில் இருந்தே தனுஷின் நெருங்கிய தோழியாக இருக்கும் {ஷோபனா} நித்யா மேனன் தனுஷுடைய நல்லது கெட்டதில் பங்கெடுத்துக்கொள்கிறார்.

ஒரு வீட்டிற்கு உணவை டெலிவரி செய்ய செல்லும் தனுஷ் தனது பள்ளிவருவ ஒருதலை காதலி ராஷி கன்னாவை எதிர்ச்சியாக சந்திக்கிறார். அதன்பின், இருவரும் மீண்டும் பழைய நட்பின் அடிப்படையில் பேச துவங்குகிறார்கள். இருவரும் சற்று நெருங்கி பழக துவங்கியவுடன் தனது காதலை ராஷி கன்னாவிடம் கூறுகிறார் தனுஷ். ஆனால், தனுஷின் காதலை ராஷி கன்னா ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன்பின், சில நாட்கள் காதல் தோல்வியில் வாடி வரும் தனுஷ், இரண்டாவது முறையாக வேறொரு பெண்ணுடன் காதலில் விழுகிறார். ஆம், தனது தாத்தா பாட்டியின் அழைப்பை ஏற்று உறவுக்கார திருமணத்திற்காக ஊருக்கு செல்லும் தனுஷ், அங்கு பிரியா பவானி ஷங்கரை சந்திக்கிறார். பார்த்தவுடன் அவரை காதலிக்க துவங்கும் தனுஷிற்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

தான் காதலித்து இரு பெண்களும் தன்னை காதலிக்க வில்லை என்று புலம்பும் தனுஷிடம், அவரது தாத்தா பாரதிராஜா ஒரு யோசனை கூறுகிறார். உன் சிறு வயதில் இருந்து உனக்காக, உன்னுடன் மட்டுமே இருக்கும் {ஷோபனா} நித்யா மேனனை காதலிக்க சொல்கிறார். இதன்பின், சற்று தயக்கத்துடன் நித்யா மேனனை காதலிக்க துவங்கும் தனுஷ், சமயம் பார்த்து தனது காதலை நித்யா மேனனிடம் கூறுகிறார். நித்யா மேனன் தனுஷின் காதலை ஏற்று கொண்டாரா? இல்லையா? தனது தந்தையின் மீது தனுஷுக்கு இருந்த கோபம் தணிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..

படத்தை பற்றிய அலசல்

வழக்கம் போல் நடிப்பில் 100% ஸ்கோர் செய்துள்ளார் தனுஷ். செண்டிமெண்ட், காதல், காமெடி, சோகம் என அனைத்திலும் தனித்துநிற்கிறார். தனுஷின் தோழியாக வரும் நித்யா மேனன் தனுஷை மிஞ்சும் அளவிற்கு பிரமாதமாக நடித்துள்ளார். அதற்க்கு தனி பாராட்டு. இயக்குனர் பாரதிராஜாவின் நடிப்பு சிறப்பு. இப்படியொரு தாத்தா நமக்கு இல்லையே என்று ஏங்கும் அளவிற்கு அருமையாக நடித்துள்ளார்.

தந்தையாக வரும் பிரகாஷ் ராஜ் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டார். ராஷி கன்னா, பிரியா பவானி ஷங்கர் இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்கள். நித்யா மேனனின் தம்பிய வரும் நடிகர் பப்பு கிளைமாக்ஸில் க்ளாப்ஸை அள்ளிவிட்டார்.

இயக்குனர் மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கம் பக்கா. திரைக்கதை எந்த ஒரு இடத்தில் தொய்வு இல்லாமல் ஃபீல் குட்டாக நகர்கிறது. வசனங்கள் படத்திற்கு பலம். நகைச்சுவை அதைவிட பிரமாதம். அனிருத்தின் பாடல்கள், பின்னணி இசை படத்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவிற்கு தனி அப்லாஸ். பிரசன்னா ஜி.கேவின் எடிட்டிங் சூப்பர்.

க்ளாப்ஸ்

தனுஷ், நித்யா மேனன் நடிப்பு

பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பு

மித்ரன் ஆர். ஜவஹரின் இயக்கம், திரைக்கதை

அனிருத்தின் பாடல்கள், பின்னணி இசை

வசனம்

பல்ப்ஸ்

சிறு சிறு தவறுகள் ஆங்காங்கே இருந்தாலும், குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை

மொத்தத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் 

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor