6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி!
தலையில் அடிப்பட்டதால் சுமார் ஆறு மாதங்கள் நினைவுகளை இழந்து விட்டதாக நடிகை திஷா படானி கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலையில் அடிப்பட்டதால் சுமார் ஆறு மாதங்கள் நினைவுகளை இழந்து விட்டதாக நடிகை திஷா படானி கூறியிருப்பது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட்டில் மாடலாக இருந்து முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பவர் திஷா படானி. உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உடையவரான இவர், அடிக்கடி தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவார். அதைக் காண தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இந்நிலையில் ஒருமுறை உடற்பயிற்சி செய்தபோது, தலையில் அடிப்பட்டு சுமார் ஆறு மாதகாலம் நினைவிழந்துவிட்டதாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து திஷா படானி கூறுகையில், " ஒருமுறை கான்க்ரீட் தரையில் ஜிம்னாஸ்ட்டிக் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து தலையில் அடிப்பட்டது. இதனால் சுமார் ஆறு மாதங்கள் நினைவில்லாமல் இருந்தேன். அந்த சமயத்தில் எனது வாழ்வில் நடந்த எந்த விஷயமும் எனக்கு தெரியாது", என கூறியுள்ளார்.
எம்.எஸ்.தோனி, குங்குபூ யோகா, வெல்கம் டூ நியூயார்க் உள்பட நிறைய பிரமாண்ட படங்களில் நடித்தவர் திஷா படானி. அவர் நடித்துள்ள பாரத் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ஆதித்யா ராய் கபூருடன் ஜோடி சேர்ந்து, மலாங் எனும் படத்தில் திஷா நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
அடிக்கடி தனது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிடும் அரைகுறை ஆடை புகைப்படங்களால் சர்ச்சைகளில் சிக்குபவர் திஷா. சமீபத்தில் கூட அவர் தொடை தெரியும்படி வெளியிட்ட புகைப்படம் ஒன்று நெட்டிசன்களின் கண்டனத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.