இவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா?

நடிகை சமந்தாவின் சம்பளத்தை கேட்பவர்களுக்கு தலை சுற்றலே ஏற்பட்டுவிடும்.

Jul 25, 2019 - 16:11
 0
இவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா?
சமந்தா

நடிகை சமந்தாவின் சம்பளத்தை கேட்பவர்களுக்கு தலை சுற்றலே ஏற்பட்டுவிடும்.

பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. ஆனால் நான் ஈ படத்தின் மூலம்தான் பிரபலமானார். 

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ள போதே திருமணம் செய்துக்கொண்டார் சமந்தா. 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 

திருமணத்திற்கு பிறகும் சமந்தா சினிமாவில் பிஸியாக உள்ளார். பல நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் டவுன் ஆகிவிடும். அல்லது அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்க சென்று விடுவார்கள். 

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு திருமணத்திற்கு பிறகுதான் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. அண்மையில் சமந்தா நடித்த ஓ பேபி படம் ரிலீஸானது. 

இந்த படம் ரிலீஸான ஒரு வாரத்திலேயே 17 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது. ஹீரோயினை மையப்படுத்தி வெளிவந்த படங்களிலேயே இதுதான் அதிக கலெக்ஷனை அள்ளிய படம் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் வசூல் தற்போது வரை 40 கோடியை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார் சமந்தா. 

அதாவது தனது சம்பளத்தை மூன்று கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம். தயாரிப்பாளர்களும் சமந்தா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor