ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா!

நடிகர் அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய பிரபலம். தமிழ்நாட்டை தாண்டி இந்திய மொழி ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.

ஹீரோயின் போல் மாறிய அஜித்தின் மகள் அனோஷ்கா!
அஜித்

நடிகர் அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய பிரபலம். தமிழ்நாட்டை தாண்டி இந்திய மொழி ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.

நரைத்த முடியை காட்டி நடிக்க முடியாது என பலர் டை அடித்துக்கொண்டு நடித்த நேரத்தில் நான் இப்படிதான், இப்படி தான் நடிப்பேன் என சால்ட் அன் பெப்பர் லுக்கில் நடித்து அதிலும் மாஸ் காட்டினார்.

இப்போது அவரே அப்படி இருக்கும் போது நமக்கு என்ன என்று இப்போது பலரும் சால்ட் அன் பெப்பர் லுக்கில் சுற்றுவதை நாம் காண்கிறோம்.

அஜித் 61

அஜித் வலிமை படத்தை தொடர்ந்து இப்போது தனது 61வது படத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இருந்தது.

இந்த நிலையில் அஜித், அவரது மகள் அனோஷ்கா, ஷாலினி 3 பேருடனும் எடுத்த புகைப்படத்தை தயாநிதி அழகிரி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் அளவிற்கு அழகாக உள்ளாரே அஜித்தின் மகள் அனோஷ்கா என புகழ்ந்து வருகிறார்கள்.

Ajithkumar