வாத்தி கம்மிங் ஒத்தே பாடலுக்காக காத்திருக்கும் பிகில் பட நடிகை ரெபா மோனிகா!

மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் முன்பே பலரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனை, படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற போராட்டம் ஆகியனவற்றை அரசியல் சூழ்ச்சியாகவே பலர் நினைக்கிறார்கள்.

வாத்தி கம்மிங் ஒத்தே பாடலுக்காக காத்திருக்கும் பிகில் பட நடிகை ரெபா மோனிகா!
ரெபா மோனிகா

மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் முன்பே பலரின் கவனத்தை ஈர்த்துவிட்டது. விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனை, படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற போராட்டம் ஆகியனவற்றை அரசியல் சூழ்ச்சியாகவே பலர் நினைக்கிறார்கள்.

கடந்த வருடம் வெளியான பிகில் படத்தின் வசூலாலும், ஃபைனாசியர், தயாரிப்பாளர் ஆகியோரின் வீடுகளிலும் பணம் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டன. இருந்த போதிலும் விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

அவருக்கான ஆதரவும் குவிந்தன. மாஸ்டர் படத்தில் அதற்கான பதிலடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் அனைத்து ரசிகர்களும் தற்போது இப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பிகில் படத்தில் அவருடன் ஆசிட் விசப்பட்ட பெண்ணாக நடித்த ரெபா மோனிகா இப்பாடலை எதிர்பார்த்திருப்பதாக தன் ஆவலை வெளிப்படுத்தியுள்ளார்.