சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை!

சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தின் வெற்றியால் அதிகம் மகிழ்ச்சியில் இருக்கிறார். அந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாகி வசூலித்துவிட்டது. தமிழகத்தில் மட்டுமே இந்த படம் 70 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி இருக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை!
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தின் வெற்றியால் அதிகம் மகிழ்ச்சியில் இருக்கிறார். அந்த படம் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாகி வசூலித்துவிட்டது. தமிழகத்தில் மட்டுமே இந்த படம் 70 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி இருக்கிறது.

தற்போது SK20 படத்தில் அனுதீப் இயக்கத்தில் சிவா நடித்து வருகிறார். அதில் வெளிநாட்டு நடிகை அவருக்கு ஜோடி ஆகிறார். SK21 படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் பல்லவி ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் மண்டேலா புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் கூட்டணி சேர இருக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் 22வது படமான இதை SK22 என குறிப்பிட்டு வருகின்றனர். இந்த படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது என தகவல் வந்திருக்கிறது.

கியாரா அத்வானி தெலுங்கில் நடித்து இருந்தாலும் தமிழில் இதுதான் அவருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Kiara Advani