சினிமாவில் இருந்து ஓய்வு பெரும் நடிகை காஜல் அகர்வால்?
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, இந்தியன் 2, தெலுங்கில் ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு தான் நடிகை காஜல் அகர்வாலுக்கு கவுதம் என்பவருடன் காதல் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் அதிர்ச்சியளிக்கும் வகையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது :
" கடந்த வருடம் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்த பிறகு சொந்த வாழ்க்கைக்கு நேரத்தை செலவழிக்காமல் உடனடியாக சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடிக்க சென்று விட்டேன். படங்களில் நடிப்பது, நடித்து முடிந்த படங்களை விளம்பரம் செய்வது என பிசியாகவே வாழ்க்கை நகர்கிறது.
இதனால் சொந்த வாழ்க்கையை அனுபவிக்க முடியாத வருத்தம் எனக்கு உள்ளது. கவுதம் கிச்சலுவுக்காக சினிமாவில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இப்போது தமிழில் ஹேய் சினாமிகா, கருங்காப்பியம், கோஷ்டி படங்களில் நடித்து முடித்து விட்டேன்.
அடுத்து ஆச்சார்யா, அதன்பிறகு நாகார்ஜுனா கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிக்க வேண்டி உள்ளது. அதற்குமுன்பு கணவருக்காக கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு, மீண்டும் படங்களில் நடிக்க துவங்குவேன் " என்று அவர் கூறியுள்ளார்.
இந்த தகவல் தற்போது காஜல் அகர்வால் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.