மாஸ்டர் இசை வெளியீட்டு விழா இங்கு தான் நடக்கின்றதா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழா இங்கு தான் நடக்கின்றதா?
மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படைப்பிடிப்பு முடிந்தது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15ம் தேதி நடக்கவுள்ளதாக சன் தொலைக்காட்சி அறிவித்தது.

மேலும், இந்த நிகழ்ச்சி ஒரு நேரலையாகவும் ஒளிப்பரப்பவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து கடந்த படங்கள் போல் விஜய் இதை பெரியளவில் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம்.

இதனால், ஹோட்டல் The Leela Palace அல்லது சன் தொலைக்காட்சி ஆபில் இதில் இரண்டில் நடக்கலாம் என்று ஒரு சில செய்திகள் கசிந்துள்ளது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இப்படியான தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றது.