சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கவுள்ள மாஸ் இயக்குனர்!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

Feb 8, 2022 - 04:19
 0
சூப்பர்ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கவுள்ள மாஸ் இயக்குனர்!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

வெற்றிமாறன் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க வாய்ப்புள்ளது என்று ஒரு பக்கம் கூறினாலும், மறுபக்கம் இயக்குனர் பால்கிக்கும் இதில் வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், லேட்டஸ்ட் அப்டேட்டாக நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவுள்ள இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலிப்குமார் இப்படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தற்போது தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் எனும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor