வலிமை திரைவிமர்சனம்

வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந்த படம். அஜித்தை பல வருடமாக ப்ராப்பர் ஆக்‌ஷன் படத்தில் பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு வலிமை Glimpse எதிர்ப்பார்ப்பை பல மடங்கு ஆக்கியது, அதை படத்திலும் வினோத் செய்து காட்டினாரா, பார்ப்போம்...

Feb 25, 2022 - 02:18
 0
வலிமை  திரைவிமர்சனம்
அஜித்

வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந்த படம். அஜித்தை பல வருடமாக ப்ராப்பர் ஆக்‌ஷன் படத்தில் பார்க்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு வலிமை Glimpse எதிர்ப்பார்ப்பை பல மடங்கு ஆக்கியது, அதை படத்திலும் வினோத் செய்து காட்டினாரா, பார்ப்போம்...

கதைக்களம்

  சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

செயின் பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை என இவர்களின் குற்றங்கள் போலீஸ் அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவு நடந்து கொண்டே இருக்கிறது. மற்றொரு புறம் அஜித் Assistant commissioner அர்ஜுனாக மதுரையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தனது தம்பி மற்றும் அண்ணனின் நடவடிக்கை காரணமாக சென்னைக்கு குடும்பத்துடன் வருகிறார் அஜித். பின்னர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக வரும் ஹுமா குரேஷியுடன் இணைந்து சென்னையில் நடக்கும் கொலை ஒன்றை விசாரிக்க தொடங்குகிறார் அஜித்.

விசாரணையில் சென்னையில் நடக்கும் அனைத்து குற்றங்களும் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்களால் தான் நடத்தப்படுகிறது என்பது தெரிய வருகிறது , பின் Satan Slave தலைவராக இருந்து இத்தனை நாட்கள் அனைத்து குற்றங்களையும் முகம் காட்டாமல் பின்னால் இருந்து செயல் படுத்தி வரும் கார்த்திகேயாவை அஜித் தனது அதிரடி நடவடிக்கையால் பிடிக்கிறார்.

அதேசமயம் அஜித்தின் தம்பியும் Satan Slave குழுவை சேர்ந்தவர் என்பது தெரியவர படத்தின் திரைக்கதை மாறுகிறது. பின்னர் அஜித் கார்த்திகேயா சதித்திட்டத்தை எப்படி உடைக்கிறார், தம்பியை Satan குழுவிடம் எப்படி மீட்கிறார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

வலிமை திரைப்படத்தை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அஜித் தாங்கி நிற்கிறார் என்றே கூறலாம். இத்தனை நாட்கள் கழித்து திரையில் அஜித்தை பார்க்கும் ரசிகர்களை தனது தோற்றத்திலும் நடிப்பில் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹுமா குரேஷி மாஸ் காட்சிகளும் வைக்கப்பட்டு கிளாப்ஸ் வாங்கியுள்ளார். வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள கார்த்திகேயா தனது நடிப்பினால் மிரட்டியுள்ளார்.

மேலும் படத்தில் நடித்துள்ள மற்ற சில நடிகர்களும் தங்களின் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். இப்போது திரைக்கதைக்கு வருவோம்.

பட தொடக்கத்திலே நகரத்தில் நடக்கும் குற்றங்களை பதறவைக்கும் படி காட்சிப்படுத்தியுள்ளது இயக்குனர் வினோத் ஸ்டைலை காண்பிக்கிறது. அப்போதில் இருந்து தொடங்கும் முதல் பாதி டாப் கியரில் விறுவிறுப்பாக செல்கிறது.

இன்டெர்வல் வரை ஒரு இடம் கூட சலிப்பு தட்டவில்லை, அந்தளவிற்கு அதிரடியான காட்சிகளுடன் செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதி அஜித் படத்திற்கே உரிய வழக்கமான காட்சிகளுடன் முடித்துள்ளார்.

இரண்டாம் பாதி கொஞ்சம் ஒரு சில இடங்களில் பொறுமையை சோதிக்கின்றது, பேமிலி செண்டிமெண்ட் ஏதோ டச் ஆகவில்லை பெரிதாக. ஆனால் அந்த பஸ் பைட் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் தான், வினோத் அந்த காட்சிகாக எடுத்த மெனக்கெடல் அதோடு திலீப் மாஸ்டர் ஸ்டெண்ட் என அதகளம்.

அதோடு நிரோவ் ஷா ஒளிப்பதிவு மொத்த படத்தையும் தாங்கி நிற்கின்றது, கண்டிப்பாக தனி விருது அவருக்கு தரலாம், இசை யுவனா, ஜிப்ரானா தெரியவில்லை, சுமார் ரகம் தான்.

க்ளாப்ஸ்

  படத்தின் முதல் பாதி

சண்டைக்காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் ஸ்டைல்

  டெக்னிக்கல் ஒர்க்

  பல்ப்ஸ்

இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் கத்திரி போட்ருக்கலாம்.

செண்டிமெண்ட் காட்சிகள் ஒட்டவே இல்லை

  மொத்தத்தில் வலிமை வினோத் டச் பெரிதும் இல்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor