கண்ணீருடன் திரையரங்கை விட்டு வெளியேறிய வலிமை பட கதாநாயகி!
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் வலிமை.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் வலிமை.
இன்று பிரமாண்டமாக உலகமெங்கும் வெளியாகியுள்ள வலிமை படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
முன்பதிவிலேயே பெரிய சாதனை படைத்துள்ள வலிமை படத்தின் முதல் நாள் எவ்வளவு கோடி இருக்கும் என பெரியளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே முதல் நாள் முதல் காட்சியை வலிமை படக்குழு ரோகினி திரையரங்கில் கண்டு கழித்தனர். அந்த வகையில் முக்கிய போனி கபூர், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் வலிமை படத்தை ரசிகர்களுடன் பார்த்துள்ளனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நடிகை ஹுமா குரேஷி வலிமை படத்தில் ரசிகர்களுக்கு அவர் கொடுத்துள்ள வரவேற்பை கண்டு கண்கலங்கிய படி திரையரங்கை விட்டு வெளியே சென்றுள்ளார்.
அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது..






