எனது காதலில் மறைக்க எதுவுமில்லை - பிரியா பவானி சங்கர்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

எனது காதலில் மறைக்க எதுவுமில்லை - பிரியா பவானி சங்கர்!
பிரியா பவானி சங்கர்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

சீரியலை தவிர்த்து இவர் முதன் முறையாக ரத்தாகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் கார்த்தி நடிப்பில் கடைக்குட்டி சிங்கம், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் மான்ஸ்டர், அருண் விஜய் நடிப்பில் மாஃபியா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் அண்மையில் இவர் தனது காதலனை குறித்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை குறித்து அண்மையில் பேசிய இவர் "என் காதலர் ராஜ் அவர்களின் பிறந்த நாள் அன்று வாழ்த்துகள் கூற இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. சென்ற ஆண்டு கூட நான் அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன்".

மேலும் பேசிய இவர் "நாங்கள் இளம் பருவத்திலேயே சந்தித்துக் கொண்டோம். அப்போது இருந்த அன்பு தற்போதும் மாறாமல் அப்படியே இருக்கிறது. நாளை எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளை பார்த்துக் கொள்ள ஏற்றவராக இருப்பார் ராஜ். என் காதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை. கல்யாணம் குறித்து சீக்கிரமே சொல்கிறேன்" என்று ப்ரியா பவானி சங்கர் மனம் திருந்து தெரிவித்துள்ளார்.