கட்டுப்போட்ட காலுடன் நடிகை யாஷிகா!

பிரபல நடிகை யாஷிகா, அவரின் தோழி வள்ளி செட்டி பவானி மற்றும் ஆண் நண்பர்களுடன் புதுச்சேரியில் ஒரு விருந்தில் கலந்துகொண்டுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பும்போது, மாமல்லபுரம் அருகில் விபத்தில் சிக்கினார்கள்.

இதில் அவரின் தோழியான வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவும் அவருடன் காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படுகாயம் அடைந்துள்ள யாஷிகா ஒரு சில அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர் பழைய நிலைக்கு திரும்ப ஒரு வருடம் ஆகலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது யாஷிகா கட்டுபோடப்பட்ட காலுடன் மருத்துவமனையில் ஓய்வு பெற்று வரும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்