தளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்?

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

தளபதி 65 படத்தில்  காஜல் அகர்வால்?
காஜல் அகர்வால்

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படத்தில் இவருக்கு வில்லனாக முதன் முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது அணைத்து விஜய் ரசிகர்களுக்கு காத்துகொண்டு இருக்கூடிய ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் தான்.

இப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அந்த வகையில் தற்போது இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்க போகிறார். இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போகிறது என்று சில தாகவல்கள் கசிந்துள்ளது.

விஜய் முதன் முதலில் ஏ.ஆர். முருகதாஸ் நடித்து வெளிவந்த படம் துப்பாக்கி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை காஜல் அகர்வால் ஜோடியாக நடித்திருப்பார்.

இவர் தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார், இதில் எனக்கு மிகவும் பிடித்து சக நடிகை தளபதி விஜய் தான். நான் கூடிய விரைவில் மீண்டும் ஒரு படத்தில் இணைவோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இணைவதாக பேசிக்கொண்டிருக்கும் படத்தில் இவர் தான் கதாநாயகியாக என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இதோ அந்த வீடியோ...